திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படம் தான்.. சினிமாவில் இருந்து ஷாலினி விலக காரணம் இது தானா?
Ajith Kumar
Shalini
By Dhiviyarajan
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி. இவர் அஜித், விஜய், பிரசாந்த், மாதவன் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
ஷாலினி 1999 ம் ஆண்டு அஜித்துடன் ’அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ஷாலினி அஜித் அனுமதி உடன் ’பிரியாத வரம் வேண்டும்’என்று படத்தில் நடித்திருந்தார். ஆனால் இதன் பின்னர் குடும்பம் தான் முக்கியம் என்று முடிவு செய்துவிட்டாராம்.
இதையடுத்து ஷாலினிக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும் படங்களில் நடிக்க மறுத்துவிட்ட்டார்.