நடிகைகளை சாக்கடை புழுவா பாக்குறாங்க.. நடிகை சாந்தி வில்லியம்ஸ் குமுறல்..
சாந்தி வில்லியம்ஸ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹாட் டாப்பிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் என்ன என்றால் கேரள சினிமாவில் நடந்த பாலியல் புகார்கள் பற்றித்தான். பல பிரபலங்கள் நடிகைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பேசி வரும் நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டியில் பல உண்மைகளை பகிர்ந்துள்ளார்.

மலையாள சினிமாவில் அதிகம் பாலிடிக்ஸ் இருக்கிறது என்றும் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 16 வயசாக இருந்தாலும் 90 வயது கிழவியாக இருந்தாலும் இரவில் கதவை தட்டும் நபர்கள் அங்கு இருக்கிறார்கள்.
ஆனால் தமிழில் நான் அப்படி சந்தித்தது கிடையாது, தப்பாகவும் பேசயது இல்லை, அதற்கு கையெடுத்து கும்பிடுகிறேன். இதையும் மீறி சிலருக்கு தவறு நடக்கிறது என்றால் அது அவர்களின் தனிப்ப்ட்ட விஷயம்.

சாக்கடை புழுவா பாக்குறாங்க
தன்னை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிட்டார்கள் என்று பல பெண்கள் கூறி வருகிறார்கள். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிட்டு சென்றுவிடலாம். ஆனால் அதை பொது இடத்தில் சொல்லும் பெண்கள் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள்.
அந்த பெண்களுக்கு அதனால் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதனால் சில விஷயங்களை யோசித்துத்தான் சொல்ல வேண்டும். சினிமாவில் நடிகைகளை சாக்கடை புழுவாகத்தான் பார்க்கிறார்கள்.
அவர்களுக்கும் மனசு இருக்கு, குடும்பம் இருக்கு. அவங்க மனசுவிட்டு அழவேண்டும் என்று நினைத்தால்கூட அவர்களால் அழமுடியாது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏன் பேச வேண்டும். இவர்களின் மனதிற்குள் ரத்தம் சதைத்தான் இருக்கும் அதை ஏன் குத்தி ரணமாக்க வேண்டும் என்று சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்துள்ளார்.