கள்ளக்குறிச்சிக்கு சென்ற நடிகர் விஜய்!! மறைமுகமாக கலாய்த்த பிரபல நடிகை...
தமிழகம் முழுவதும் தற்போது பதற்றமாக பார்த்து வரும் ஊர் என்றால் அது கள்ளக்குறிச்சி தான். விஷச் சாராய குடித்தவர்களின் மரணங்கள் தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் நேரில் சென்று பார்த்து வரும் நிலையில் இன்று ஜூன் 21 ஆம் தேதி நிலவரப்படி 49 பேர் உயிரழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ரூபாய் 10 லட்சமாக விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், 20 ஆம் தேதி இரவு கள்ளக்குறிச்சிக்கு சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரித்திருந்தார்.
விஜய் சந்தித்து நலம் விசாரித்த விஷயம் இணையத்தில் வீடியோவாக வைரலாகியது. இதுபற்றி இணையத்தில் பலர் ஆதரவாக பேசி வந்தாலும் சிலர் விஜய்யை தாக்கி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது நடிகையும் மருத்துவரான சர்மிளா, விஜய் மது குடிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து Excellent என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். விஜய்யை தற்போது மறைமுகமாக சர்மிளா கலாய்த்திருப்பதை பலர் திட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.
Excellent ?? https://t.co/icyvavrwG7
— Dr M K SHARMILA (@DrSharmila15) June 21, 2024