விஷால் அண்ணியா இது! ஆள் ஆடையாளம் தெரியாமல் மாறி நடிகை ஸ்ரேயா ரெட்டி..
சினிமாவை பொருத்தவரை நடிகைகள் மார்க்கெட் இழக்க காரணமாக இருப்பது வயது மற்றும் திருமணம் தான். அதிலும் திருமணமாகி படங்களில் நடிக்காமலும் உடல் எடையை அதிகரித்தும் காணப்படுவதால் படங்கள் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. நடிகர் விஷாலின் திமுரு படத்தில் மொரட்டு வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா ரெட்டி.
ஏலேய் இசுக்கு என்ற அவரின் டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கூடம், வெயில், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் விஷாலின் அண்ணனான விகரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்குபின் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கணவருடன்சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து வந்தார். மீண்டும் படங்களில் நடிக்க போட்டோஹுட் எடுத்து வெளியிட்டு வந்த ஸ்ரேயா சமீபத்தில் அண்டாவ காணோம் படத்தில் நடித்தார்.
கொரோனா லாக்டனாலும் சில காரணங்களாலும் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது உடல் எடையை முற்றிலும் பராமறிக்க உடற்பயிற்சியை கடுமையாக்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.