லீக் செஞ்சவங்களை யாரும் கேக்கல..என்னை மட்டும்!! சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் கோபமான பதிவு..

Serials Gossip Today Tamil TV Serials Actress Siragadikka Aasai
By Edward Mar 29, 2025 10:30 AM GMT
Report

ஸ்ருதி நாராயணன்

சின்னத்திரை சீரியலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினியின் தோழியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். கடந்த சில நாட்களுக்கு முன் அவரின் அந்தரங்க வீடியோ ஒன்று லீக்காகி மிகப்பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது உண்மையா? பொய்யா? என்று பலரும் அதிர்ச்சியடைந்து கேள்வி கேட்டு வந்த நிலையில் ஸ்ருதி நாராயணன் கோபத்துடன் ஒரு பதிவினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

லீக் செஞ்சவங்களை யாரும் கேக்கல..என்னை மட்டும்!! சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் கோபமான பதிவு.. | Actress Shruthi Narayanan Statement Alleged

கோபமான பதிவு

அதில், நானும் பெண் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. எனக்கு நெருக்கமானவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அதை நீங்கள் மோசமாக்குகிறீர்கள்.

அனைத்தையும் இப்படி காட்டூத்தீ போல் பரப்பாதீர்கள். வீடியோ பார்க்க வேண்டுமென்றால் உங்கள் அம்மா, சகோதரி அல்லது காதலி வீடியோவை பாருங்கள். ஏனென்றால் அவர்களும் பெண் தான். அவர்களுக்கும் என்னை போல் உடல் இருக்கிறது.

கமெண்ட்டில் என்னை தான் எல்லோரும் குறை கூறுகிறார்கள். அந்த வீடியோவை லீக் செய்தவரை எந்த கேள்வியும் கேட்கவில்லையே என்று கோபமாக ஒரு பதிவினை போட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.