பிச்சை எடுத்து சாப்பிடிவேனே தவிர வடிவேலுவுடன் நடிக்கமாட்டேன்!! நடிகை சோனா ஓபன்...
நடிகை சோனா
தமிழ் சினிமாவில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமான நடிகை சோனா, நடிகர் அஜித் நடிப்பில் எழில் இயக்கத்தில் பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து வந்த சோனா, பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதிலும் கவர்ச்சி ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். சமீபத்தில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து முடித்திருந்தார். நடிகை சோனா அளித்த பேட்டியொன்றில் குசேலன் படத்தில் நடித்தப்பின் நடந்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
வடிவேலுவுடன் நடிக்கமாட்டேன்
அதில், குசேலன் படத்திற்கு பின் எனக்கு வடிவேலுவுடன் நடிக்க 16 படவாய்ப்புகள் வந்தது. 16 படங்களில் வடிவேலுவுடன் நடிப்பதை தவிர்த்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவருடன் நடிக்க முடியாது, பிச்சை எடுத்து சாப்பிடுவேனே தவிர வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்ட்டே என்று சொல்லிவிட்டேன்.

அவருடன் வேலை செய்ய முடியாது, அவரை ஹேண்டில் பண்ண முடியாது. அதனை வெளியில் ஓபனாகவும் சொல்லமுடியாது. எனக்கென சுய மரியாதை இருக்கே என்று சோனா தெரிவித்துள்ளார்.