கமல் மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!! குழப்பத்தில் ரசிகர்கள்..

Kamal Haasan Shruti Haasan Lokesh Kanagaraj Raaj Kamal Films International
By Edward Feb 08, 2024 05:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் ராஜ் கமல் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷ்னல் நிறுவனத்தை துவங்கி பல படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

கமல் மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!! குழப்பத்தில் ரசிகர்கள்.. | Actress Shruti Haasan Romance With Lokesh Photos

அந்தவகையில், தன்னுடைய மூத்த மகள் ஸ்ருதி ஹாசனின் படைப்பிற்கு ஒரு வழிவகையை ஏற்படுத்தி இருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பை தாண்டி ஆல்பம் பாடல்களை பாடி வெளியிடுவதில் இசை ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படி சமீபத்தில் Monster Machine என்ற ஆல்பம் பாடலை பாடி நடித்தும் இருந்தார். தற்போது ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் தன் மகள் ஸ்ருதி ஹாசனை வைத்து ஒரு ஆல்பம் உருவாகும் என்று வெளிநாட்டு விருதுவிழா ஒன்றில் கமல் ஹாசனே கூறியிருந்தார்.

அவர் கூறிய  Inimel Delulu is the New Solulu ஆல்பம் பாடலில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்துள்ளது.

அந்த தப்பு பண்ணேன், நிறைய பட வாய்ப்பு வந்துது.. நடிகை மாளவிகா மேனன்

அந்த தப்பு பண்ணேன், நிறைய பட வாய்ப்பு வந்துது.. நடிகை மாளவிகா மேனன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜும் அந்த ஆல்பத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகவுள்ள அந்த ஆல்பத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. மேலும், கிரியேட்டிவிட்டி ஹெட்டாகவும் ஸ்ருதி ஹாசன் இருக்கிறாராம்.

தற்போது ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜை ரொமான்ஸாக பார்த்து எடுத்த புகைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் என்ன இருவரும் கல்யாணம் செய்யப்போகிறார்களா என்ற கருத்துக்களை பதிவுட்டு வருகிறார்கள்.