40 வயசாகியும் திருமணம் செய்யாத சீரியல் நடிகை ஸ்ருதி!! இதுதான் காரணம்..
சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் மக்கள் மத்தியில் நல்ல வர்வேற்பை பெற்று வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். மலையாள சினிமாவில் அகஜன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழில், விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின், மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த ஸ்ருதி, 2009ல் தென்றல் என்ற சீரியலில் துளசி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நித சீரியல் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதன்பின் திருமதி செல்வம், ஆபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது 40 வயதை தாண்டியும் ஸ்ருதி ராஜ் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அதற்கான காரணத்தை சமீபத்தில் என்ன என்று கூறியிருக்கிறார்.
எதையும் திட்டமிட்டு செய்யவில்லை என்றும், திட்டமிட்டு செய்தாலும் சரியாக வராது. அதனால் தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னை பற்றி, என் திருமணம் பற்றி எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ராஜ். தற்போது 40 வயதையும் தாண்டியுள்ள ஸ்ருதிராஜ், இன்றும் இளமையுடன் இருந்து ரசிகர்களை தன் அழகிய புகைப்படத்தால் கவர்ந்து வருகிறார்.