நடிகை சிம்ரன் மகன்களா இது!! வாய்ப்பிளக்க வைக்கும் ஜிம்பாடியில் மூத்த மகனின் புகைப்படம்..
90-ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன்.
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார்.
சிம்ரன் கடந்த 2003ல் பல ஆண்டு காதலரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சிம்ரனுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிய நிலையில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் தன்னுடைய மூத்த மகன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஜிம்பாடிபில்டர் போல் காணப்படுவதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.