நீச்சல் குள புகைப்படம்.. 40 வயதில் நடிகை சினேகா குழந்தைகளுடன் வெளியிட்ட போட்டோஸ்..

Prasanna Sneha
By Edward Aug 11, 2022 07:30 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியா திகழ்ந்து புன்னகை அரசியாக ரசிகர்கள் மனதை ஈர்த்தவர் நடிகை சினேகா. என்னவளே என்ற படத்தில் அறிமுகமாகி ஆனந்தம், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார்.

அதன்பின் 2002-2004 ஆண்டுகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிஸி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என்று பலருடன் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த சினேகா சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி க்ளாமர் குயினாகவும் வலம் வந்தார்.

அதன்பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2012க்கு பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்த சினேகா பிரசன்னா வியான், ஆத்யந்தா என்ற இரு பிள்ளைகளை பெற்றார். அதன்பின் மீண்டும் தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

40 வயதான சினேகா மகனின் பிறந்த நாளை கொண்டாட வெளியில் சென்றுள்ள சினேகா நீச்சல் குளத்தில் இரு பிள்ளைகளையும் அணைத்தப்படி எடுத்த புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.