சித்திக்கு உடம்பு சரியில்ல, பிளாட்டுக்கு வர சொன்ன நடிகை!! மருத்துவருக்கு நடந்த சம்பவம்..
அதுல்யா சந்திரா
நடிகர் சந்தானம் நடித்த குலு குலு, யோகி பாபுவின் ட்ரிப் போன்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா சந்திரா. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நடிகை அதுல்யா, மருத்துவரை தொடர்பு கொண்டு என்னுடைய சித்திக்கு திடீரென உடம்பு சரியாமல் போய்விட்டது, அவசர சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று பிளாட்டுக்கு வாருங்கள் சார் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

டாக்டர் அதை நம்பி நடிகையின் பிளாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால், மருத்துவர் பிளாட்டுக்குள் சென்றதும் அங்கு மறைந்திருந்த நடிகர் பிபின் பெரும்பல்லி, அவரது டிரைவர், நடிகை அதுல்யா உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் கதவை பூட்டி மருத்துவரை தாக்கியுள்ளனர். அதுல்யாவின் நெருங்கிய உறவினர் ஒருவருடன் மருத்துவருக்கு நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது.
3 லட்சம் ரூபாய் பணம்
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட் ஏற்பட இருவரும் பிரிந்த நிலையில், பிரச்சனையை தீர்க்க பணம் தர வேண்டும் என்று அந்த கும்பல் மருத்துவரை மிரட்டியுள்ளது. ஆனால் மருத்துவரோ, கேட்ட பணத்தை கொடுக்க மருத்ததால் இந்த கொடூரமான சம்பவத்தை செய்துள்ளனர்.
அவரிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் பணம், விலையுயர்ந்த செல்போம், ஸ்மார்ட் வாட்ச் என்று அவரிடம் இருந்து பறித்துள்ளனர். காயமடைந்த மருத்துவர் போலிசாரிடம் புகாரளித்த நிலையில், அதுல்யா சந்திரா, பிபின் பெரும்பள்ளி உட்பட 3 பேரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகிறார்கள் போலிஸ்.