திருமணத்திற்கு முன் இத்தனை நடிகர்களுடன் காதலில் சிக்கிய சினேகா!! ஒரே படத்தால் காலி செய்த தனுஷ்
தமிழ் சினிமாவின் புன்னகை அரசியாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. ஆரம்பத்தில் சிலரால் தான் வாய்ப்பு பெற்று சினிமா வாய்ப்பினை பெற்றார் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருந்தார். ஆரம்பத்தில் சிலருடன் காதலில் இருந்ததாகவும் சினேகா பற்றி கிசுகிசுக்கப்பட்டது. அந்தவகையில் நடிகை சினேகாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகர்கள் 6 பேர் யார் தெரியுமா.
ராகவா லாரன்ஷ்
சினேகாவின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸுடன் பாண்டி படத்தில் நடித்திருந்தார். அப்போது இருவரும் ஒரு பாடலுக்கு நெருக்கமாக ஆடியதால் அதிகமாகவே கிசுகிசுக்கப்பட்டனர்.
பிரசாந்த்
தமிழ் ரசிகைகளின் சாக்லெட் பாயாக திகழ்ந்த நடிகர் பிரசாந்துடன் விரும்புகிறேன் படத்தில் நடித்த சினேகா, முதல் படத்திலேயே அவருடன் நெருக்கம் காட்டியதால் கிசுகிசுக்கப்பட்டார்.
அப்பாஸ்
ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், அது போன்ற படங்களில் நடிகர் அப்பாஸ் உடன் இணைந்து நடித்ததால் அவருடன் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை சினேகா.
மாதவன்
தமிழ் சினிமாவின் ஆணழகனாக திகழ்ந்து பல ரசிகைகளின் இதயத்தை ஈர்த்த நடிகர் மாதவனுடன் இணைந்து என்னவளே, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்திருந்தார். இரு படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்ததை வைத்தே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுவாக பரவியது.
தனுஷ்
சினேகா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாற்றியப்படம் புதுப்பேட்டை. விளைமாதுவாக நடித்த அப்படத்தில் நடிகர் தனுஷுன் படுக்கை காட்சியில் நடித்திருந்தார் சினேகா. அப்படத்தில் சினேகாவின் நடிப்பு முகம் சுளிக்க வைத்ததால் ஒல்லி நடிகரை வைத்து திருமணத்திற்கு முன் கிசுகிசுக்கப்பட்டார் சினேகா.
ஸ்ரீகாந்த்
90ஸ் காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் ஸ்ரீகாந்துடன் தொடர்ந்து பல படங்களில் நடித்த சினேகா காதலர்கள் என்று கூட அவர்களை பற்றி செய்திகள் வெளியானது. இருவரும் திருமணம் வரை சென்றார்கள் என்றும் அந்த உறவு சில காலங்களில் முறிந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இதுபோல் பல நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார் நடிகை சினேகா. அதன்பின் நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012ல் திருமணம் செய்தார்.