நடிகை சினேகாவுக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கா!! கணவர் பிரசன்னா சொன்ன உண்மை..
சினேகா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரோடு பெரியளவில் பிரபலமானவர் நடிகை சினேகா. பல ஆண்டுகள் கழித்து கோட் படத்தில் விஜய்க்கு கோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சினேகா பற்றி அவரது கணவர் பிரசன்னா ஒரு தகவலை கூறியிருக்கிறார். சமீபத்தில் கணவர் பிரசன்னாவுடன் அளித்த பேட்டியொன்றில், எனக்கு ஓசிடி என்ற பிரச்சனை இருப்பதாக சினேகா கூறியிருந்தார்.
ஓசிடி பிரச்சனை
அற்கு பிரசன்னா, ஆமாம் வீட்டையே 3 முறை மாற்றியிருக்காங்க, அப்படின்னா பார்த்துக்கோங்க. அவங்க மாத்தாம இருக்குற ஒரு விஷயம் என்றால் அது நான் தான் என்று கிண்டலடித்தார் பிரசன்னா.
மேலும் பேசிய சினேகா, எனக்கு எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும், கிச்சன் சுத்தமாக இருக்கணும் என்று எதிர்பார்ப்பேன். இந்த ஓசிடி பிரச்சனை அரிதான பிரச்சனையாக இருந்தாலும் இதனால் பெரிதாக அச்சப்பட தேவையில்லை.
எல்லா விஷயங்களும் சுத்தமாக இருக்க வேண்டும், சரியாக இருக்க வேண்டும் என்று இந்த பிரச்சனை இருப்பவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள் என்று சினேகா கூறியிருக்கிறார்.