முன்னணி நடிகைகளுக்கு சேலை கட்டிவிடும் நபர்.. யார் இந்த திவ்யன் ஜெயரூபன்?
சினேகா
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சினேகா. நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குழந்தை பிறந்த பின் சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா 2 குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்த பின் படங்கள் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொழிலை கவனிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

இவர் Snehalayaa என்ற புடவை கடை நடத்தி வருகிறார். சமீபத்தில் கோயம்புத்தூரில் தனது 2வது புடவை கடையை திறந்துள்ளார்.
யார் ஜெயரூபன்?
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சினேகா பட்டு சேலையில் ராஜமாதா போல ரெடியாகி வந்த காட்சிகள் வைரலானது. நடிகை சினேகாவுக்கு பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன் தான் டபுள் டிராப் சேலை கட்டி விட்டுள்ளார்.
அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திவ்யன் ஜெயரூபன் சினேகாவுக்கு மட்டுமின்றி த்ரிஷா, விஜே பிரியாங்கா, சமந்தா என பலருக்கு சேலை கட்டி விட்டுள்ளார். இவர் ஆடைகளை சரியாக அணிவித்து அழகுப்படுத்தும் வேலையை பார்த்து வருகிறார்.