அட்ஜெஸ்ட்மெண்ட் செய்றதுக்கு கவர்ச்சி காட்டிட்டி போலாம்!! கண்ணீருடன் பேசிய நடிகை சோனா..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 08, 2025 01:00 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சோனா. பல படங்களில் சிறு ரோல்களில் நடித்தாலும் கிளாமரில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் வாழ்க்கை நடந்த பல மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்றதுக்கு கவர்ச்சி காட்டிட்டி போலாம்!! கண்ணீருடன் பேசிய நடிகை சோனா.. | Actress Sona Bold Interview About Adjustment

நடிகை சோனா பேட்டி

அதில், அப்பா பிரிட்டிஷ், அம்மா ஸ்ரீலங்கன்ஸ், இருவரும் பாண்டிச்சேரியில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் நாகர்கோவில் என்பதால் சினிமாவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சினிமாவிற்கு நான் வந்ததே ஒரு விபத்து தான்.

ஜீவிதா ராஜசேகர் கடைக்கு பக்கத்தில், நான் மளிகை பொருள் வாங்குவேன். அப்போதுதான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நடிக்கவிரும்பவில்லை, இருந்தாலும் 14 வயதில் லாண்டரியில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

அப்பா குடும்பத்தை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை, அம்மாவிற்கு சர்க்கரை நோய் இருந்ததால் குடும்பத்தை சிறு வயதிலேயே கவனித்துக்கொள்ள வேலைக்கு சென்றேன்.

14 வயதில் என் குடும்ப பாரம் என்மீது வந்ததால் என் குழந்தை பருவத்தையே தொலைத்துவிட்டேன், அப்பா பாசத்திற்காக எங்கினேன். இரண்டு மூன்று முறை சினிமாவே வேண்டாம் என்று அதைவிட்டு வெளியேறிவிட்டேன். எனக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை இருந்தது, ஆனால் அந்த ஆசை நடக்கவில்லை.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்றதுக்கு கவர்ச்சி காட்டிட்டி போலாம்!! கண்ணீருடன் பேசிய நடிகை சோனா.. | Actress Sona Bold Interview About Adjustment

அட்ஜெஸ்ட்மெண்ட்

எனக்கு சில பட வாய்ப்புகள் வந்தன, ஆனால் அனைவரும் அட்ஜெஸ்ட்மெண்ட் டுக்கு அழைத்தார்கள், நான் அதற்கு நோ சொல்லிவிட்டேன். இதனால் படவாய்ப்பே இல்லாமல் போக நான் என்ன நினைத்தேன் என்றால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதற்கு பதில், கவர்ச்சி காட்டிவிட்டு போய்விடலாம் என்று கவர்ச்சி நடிகையாக் மாறிவிட்டதாக சோனா தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு தான் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் இருக்கிறது என்று நான் சொன்னாலும், அந்த சினிமாத்துறையை நான் காதலிப்பதால் விட்டுவிலகவில்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் முதலில் கொண்டு வந்ததே தயாரிப்பாளர்கள் தன், ஆனால் ஒருசில 10 சதவீத ஆண்கள் செய்யும் தவறு காரணமாக ஹீரோவாக இருந்தாலும் தயாரிப்பாளர்களாக இருந்தாலும் அவர்கலுக்குத்தான் தேவையில்லாத கெட்டப்பெயர் என்று தெரிவித்துள்ளார்.