வடிவேலுவை காரித்துப்புற ஆளு இருக்காங்க..என்னை பாடாபடுத்திட்டாரு!! நடிகை சோனா சீக்ரெட்..
நடிகை சோனா
90-ஸ் காலத்தில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமாகி, கிளாமர் காட்சிகளிலும் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை சோனா. 46 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வரும் சோனா, சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
தன் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி ஒரு படத்தையும் இயக்கி சில பிரச்சனைகளை சந்தித்தார் சோனா.
வடிவேலுவை காரித்துப்புற ஆளு இருக்காங்க
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ரஜினிகாந்தின் குசேலன் படத்தின் வடிவேலுவுடன் நடித்த அனுபவத்தை கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
அதில், வடிவேலு சார் நல்ல காமெடியன், அவரை யாராலும் அடிச்சிக்க முடியாதுன்னு உலகத்துக்கு தெரியும். ஆனால், எனக்கு அவர்கூட செட்டாகல. அவரோட கேரக்டர், குசேலன் படத்தின் பிராஜெக்ட்டில் ரொம்பவே பாடுபடுத்திட்டாரு. படமும் சரியா போகல. அதன்பின் எங்களுக்கு 16 பட வாய்ப்பு வந்துச்சு.
என் மானம் மரியாதை எனக்கு முக்கியமா இருந்துச்சு. ரோட்ல நின்னு பிச்சைக்கூட எடுத்துடலாம், அந்த மாதிரி நடிச்சி சம்பாதிக்கிற காசு வேண்டாம் என்ற முடிவில் தெளிவா இருந்தேன். வடிவேலுவை பற்றி காரித்துப்புற ஆளு இருக்காங்க.
அவர் நடிப்பில் லெஜண்ட் தான், மனிதனா அவர் வொர்த் இல்லை, நோ கமெண்ட் என்று சோனா உண்மையை கூறியிருக்கிறார்.