ரஜினிகாந்த் இப்படிப்பட்ட ஒரு நபர்தான்.. மறைந்த நடிகை சௌந்தர்யா அளித்த பேட்டி
ரஜினிகாந்துடன் இணைந்து அருணாச்சலம் மற்றும் படையப்பா என இரண்டு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா.
இந்த நிலையில், படையப்பா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சௌந்தர்யா அப்போது அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது படையப்பா ரீ ரிலீஸ் சமயத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரஜினி குறித்து அவர் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது "ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததே பெரிய விஷயம் என இருந்தேன், நான் எதிர்ப்பார்க்காத விஷயமாக இருந்தது. படையப்பா வாய்ப்பு வந்தபோது எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை.
ஆனால் ரஜினி சாருடன் பணிபுரிவது நன்றாக இருக்கும், அவருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம், மிகவும் அருமையான மனிதர்" என பேசியுள்ளார். நடிகை சௌந்தர்யா கடந்த 2004ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.