பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கேட்கிறார்கள்!! ஓபனாக பேசிய பிரபல நடிகை..
Gossip Today
Indian Actress
Actress
By Jai
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலர் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவங்களை மனம் திறந்து பேசுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்த நடிகை ஸ்ரீ சத்யா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தவறான நோக்கத்தில் அணுகியதாக கூறி புகாரளித்துள்ளார்.

சினிமாத்துறையில் நடிப்பு திறமையை தாண்டி, அட்ஜெஸ்மெண்ட் செய்தால் தான் முன்னேற முடியும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பலமுறை வாய்ப்பு கேட்க செல்லும்போது தொழில்முறை ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட ரீதியாக, தவறான உள்நோக்கத்துடன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் வெள்ளித்திரையை தவிர்த்துவிட்டு சின்னத்திரையை தேர்வு செய்தேன் என்றும் தவறு நடக்கும்போது வெளிப்படையாக பேசவேண்டும் என்று ஸ்ரீ சத்யா தெரிவித்துள்ளார்.