சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீதேவியின் பீச் ஹவுஸ்-ஐ பார்த்துள்ளீர்களா! புகைப்படத்துடன் இதோ
கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினிகாந்த் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தனக்கென்று தனி இடத்தை இந்திய சினிமாவில் சம்பாதித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு துபாயில் இவர் மரணமடைந்தார். இவருடைய மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். அதே போல் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பீச் ஹவுஸ்
நடிகை ஸ்ரீதேவிக்கு சென்னை ஈசிஆர் பகுதியில் சொந்தமாக பீச் ஹவுஸ் ஒன்று உள்ளது. இதனை 1988ல் அவர் வாங்கி இருந்தார். நீச்சல் குளத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த பீச் ஹவுஸ் உள்ளது.
இந்த நிலையில், போலியான வாரிசு சான்றிதழ் மூலம் அந்த சொத்து மூன்று பேர் உரிமை கோருவதாக போனி கபூர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த போலியான வாரிசு சான்றிதழ்களை ரத்து செய்ய கோரிய நிலையில், அது பற்றி தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



