கமல் ஹாசனுடன் காதல் தோல்வி..கொடுமைப்படுத்திய கணவர்!! 53 வயதில் மரணமடைந்த ஸ்ரீவித்யா..

Kamal Haasan Srividya Gossip Today Tamil Actress Actress
By Edward Mar 01, 2025 03:45 PM GMT
Report

ஸ்ரீவித்யா

தென்னிந்திய சினிமாவில் 80, 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை ஸ்ரீவித்யா, முடிவில்லாத கண்ணீரில் மூழ்சி தவித்த விஷயம் பலரும் தெரியாது. காதலனுக்காக மதமாறி திருமணம் செய்து கொண்ட ஸ்ரீவித்யா கணவரால் பல கொடுமைகளை சந்தித்தார். இதற்கு முன் அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தார் ஸ்ரீவித்யா.

கமல் ஹாசனுடன் காதல் தோல்வி..கொடுமைப்படுத்திய கணவர்!! 53 வயதில் மரணமடைந்த ஸ்ரீவித்யா.. | Actress Srividya Kamal Love Failure Tragic Life

அப்போது அவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி கமலும் ஸ்ரீவித்யாவும் தீவிரமாக காதலித்தனர். திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் இருந்த போது ஸ்ரீவித்யாவின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது கமலின் பேச்சை உதாசீனம் செய்த ஸ்ரீவித்யாவை பிரிந்து பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்தார். இந்த விஷயத்தை கேட்டு ஸ்ரீவித்யா கஷ்டப்பட்டும் இருந்திருக்கிறார்.

கொடுமைப்படுத்திய கணவர்

அதன்பின் மலையாள இயக்குநர் ஜார்ஜ் தாமஸை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் சொர்க்கமாக அமையும் என்று எதிர்ப்பார்த்த ஸ்ரீவித்யாவை திருமணத்திற்கு பின் கணவர் பல கொடுமைகளை கொடுத்துள்ளார். படங்களில் இருந்து விலகிய ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் அனைத்தையும் கணவர் அபகரித்துக்கொண்டார். பின் துன்புறுத்தல்களில் இருந்து மீள 1980ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

கமல் ஹாசனுடன் காதல் தோல்வி..கொடுமைப்படுத்திய கணவர்!! 53 வயதில் மரணமடைந்த ஸ்ரீவித்யா.. | Actress Srividya Kamal Love Failure Tragic Life

விவாகரத்துக்கு பின் சொத்துக்களை இழந்து பொருளாதாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ரீவித்யா. குணச்சித்திர ரோலில் நடித்து வந்தவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக துவங்கியிருக்கிறது.

புற்றுநோய் பாதித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகையில் தனது சொத்துக்கள் அனைத்தியும் இசை மற்றும் நடனக் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். தன்னுடைய வீட்டில் பணியாற்றிவர்களுக்கும் மீத சொத்துக்கலை பகிர்ந்து கொடுத்த ஸ்ரீவித்யா தன்னுடைய 53 வயதில் காலமானார். அவரின் இறப்பினை நினைத்து கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது.