ரூ. 1040 கோடி சொத்து!! எம் எஸ் தோனியின் இந்த சட்டை இத்தனை ஆயிரமா?
எம் எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி, அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாடுவாரா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி தன்னுடைய 44வது பிறந்தநாளை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தோனி கொண்டாடினார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தோனி, விளம்பரங்களில் நடித்தும் பல கோடி சம்பாதித்து வருகிறார்.
72 ஆயிரம்
விலையுயர்ந்த பைக் கலெக்ஷன்களை வைத்திருக்கும் தோனியின் ஒரு சட்டையின் விலை இத்தனை ஆயிரமா? என்று அவரது ரசிகர்கள் பிரம்பித்து வருகிறார்கள். சமீபத்தில் நீலநிற பட்டு-ஆல் ஆன ஆடையணிந்து சென்றுள்ளார்.
பியானா கீ என்ற பிராண்ட் சட்டையான இதன் விலை 865 அமெரிக்க டாலராம், இந்திய ரூபாய் மதிப்பில் 72 ஆயிரம் என்று கூறப்படுகிறது. ரூ. 1040 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் தோனியின் இந்த சட்டை தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
