அந்த நிகழ்ச்சியால் நடிகைக்கு ஏற்பட்ட பாதிப்பு! ஆதாரத்துடன் வெளியிட்ட புகைப்படம்..

gayathri arjun tamilactress srushtidange survivortamil
By Edward Sep 27, 2021 10:15 AM GMT
Report

தொலைக்காட்சி சேனல்கள் தற்போது மற்ற டிவியின் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிக்கு இணையாக பல நிகழ்ச்சிகளை கலமிரக்குவார்கள். அப்படியான தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி வெளிநாட்டு தீவில் உள்ள காட்டில் நடத்தப்பட்டது. ரியாலிட்டி ஷோவில் அடிப்படை வசதிகள் ஏதும் இருக்காது.

அதனால் அவர்களுக்கு தேவையான பொருட்களாக மசாலா பொருட்கள், நெருப்பு, உணவு சார்ந்த பொருட்கள் போன்ற பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் கலந்த கொண்டு தீவிரமாக விளையாடினர். அதில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே முதல் எலிமினேஷன் போட்டியாளராக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். முதல் வாய்ப்பை தவற விட்ட ஸ்ருஷ்டி டாங்கே மீண்டும் காயத்ரி ரெட்டியுடன் போட்டியிட்ட அந்த இரண்டாவது வாய்ப்பிலும் தோல்வியை சந்தித்தார்.

இவர் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு தான் எப்படி மாறிவிட்டேன் என்று புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த நிகழ்ச்சியால் நடிகைக்கு ஏற்பட்ட பாதிப்பு! ஆதாரத்துடன் வெளியிட்ட புகைப்படம்.. | Actress Srushti Dange Post After Survivor Show