விவாகரத்து சமயத்தில் சிபாரிசு செய்த ஒல்லி நடிகர்! மறுத்து ஒதுக்கிய இளமை நடிகை..
தமிழ் சினிமாவில் இளமை ததுப்பும் வயதில் ஏற்படும் கோளாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்தவர் தான் அந்த நடிகை. முதல் படத்திலேயே வாரிசு நடிகருடன் ஜோடிப்போட்டாலும் படத்தில் பிரபலமாகாமல் இருந்தார்.
அதன்பின் ஒருசில படவாய்ப்புகள் கிடைத்தும் சரியாக வாழ்க்கையில் அமையாமல் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தார். பின் உடல் எடையை கூட்டி அடையாளம் தெரியாமல் மாறி பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று ஒரளவிற்கு மக்களை மனதை ஈர்த்தார்.
அதன்பின் ஒருசில வாய்ப்பு கிடைத்துள்ளது அம்மணிக்கு. ஆனால் அதெல்லாம் சரியாக அமையாது என நினைத்து அறிமுகமாகிய ஒல்லி நடிகரிடமே சென்று வாய்ப்பு கேட்டுள்ளாராம் அம்மணி.
நடிகரும் தன் பேருக்கு வாய்ப்பு கிடைக்கச்செய்துள்ளார். ஆணவத்தில் அம்மணி நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என்று கர்வத்துடன் கூறி வருகிறாராம். பாவம் நடிகர் சமீபத்தில் தான் விவாகரத்து விஷயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
இந்த சமயத்தில் இது ஒரு பிரச்சனையா என்று நடிகையை கண்டாலே ஓடுகிறாராம்.