நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை சுனைனா!! அவரே வெளியிட்ட புகைப்படம்..

Sunaina Tamil Actress Actress
By Edward Jun 07, 2024 10:30 AM GMT
Report

நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனவர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்தார்.

அதன் பின் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன ரோல்கள், கெஸ்ட் ரோல்கள் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். மேலும் சமீபத்திய வருடங்களாக ரெஜினா ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை சுனைனா!! அவரே வெளியிட்ட புகைப்படம்.. | Actress Sunaina Anounced Engaged Photo Post Viral

நடிகை சுனைனாவுக்கு தற்போது 35 வயதாகிறது. அவருக்கு திருமணம் எப்போது என தொடர்ந்து பேட்டிகளில் கேள்விகள் வந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனா தனது காதலர் கையை பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாக கூறி வருங்கால கணவருடன் மோதிரம் மாற்றிக்கொண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அந்த செய்தியை வெளியிட்டிருக்கிறார் நடிகை சுனைனா.