அனுஷ்கா வாழ்க்கையை நாசமாக்கியது இதுதான்.. கொந்தளித்த நெட்டிசன்! நடிகை வெளியிட்ட பதிவு

Anushka Shetty Sunaina
By Kathick Sep 23, 2025 02:28 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. விஜய், பிரபாஸ், ரஜினி, நாகர்ஜுனா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அனுஷ்கா வாழ்க்கையை நாசமாக்கியது இதுதான்.. கொந்தளித்த நெட்டிசன்! நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sunaina Comment On Anushka Career To Fan

இவ்வளவு ஏன் சோலோ ஹீரோயினாக நடித்து முன்னணி ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்தார். இன்று பல நடிகைகள் சோலோ ஹீரோயின் கதைகளை தேர்ந்தெடுக்க முன்னோடியாக இருந்தவரும் அனுஷ்காதான். ஆனால், அவர் எடுத்த ஒரே ஒரு முடிவு அவருடைய மொத்த திரையுலக வாழ்க்கையையும் காலி செய்துவிட்டது என ரசிகர்கள் தற்போதும் கூறி வருகிறார்கள்.

அனுஷ்கா வாழ்க்கையை நாசமாக்கியது இதுதான்.. கொந்தளித்த நெட்டிசன்! நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sunaina Comment On Anushka Career To Fan

இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் அவர் தனது உடல் எடையை கூட்டி நடித்திருந்தார். அதன்பின் அவரால் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் அவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. வெளியே எந்த நிகழ்ச்சிகளிலும் கூட கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார்.

அனுஷ்கா வாழ்க்கையை நாசமாக்கியது இதுதான்.. கொந்தளித்த நெட்டிசன்! நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sunaina Comment On Anushka Career To Fan

இந்த நிலையில், நடிகை அனுஷ்காவின் திரை வாழ்க்கையை அளித்த படம் இஞ்சி இடுப்பழகி என கூறி நெட்டிசன் ஒருவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நடிகை சுனைனா பதில் கூறியிருக்கிறார்.

அனுஷ்கா வாழ்க்கையை நாசமாக்கியது இதுதான்.. கொந்தளித்த நெட்டிசன்! நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sunaina Comment On Anushka Career To Fan

"மரியாதையுடன் இதை வேறு விதமாக பார்க்க வேண்டும், நடிகர்கள் எக்ஸ்பிரிமெண்ட் செய்ய வேண்டும். அது வேகத்தை குறைத்து இருந்தாலும், எதையும் நாசமாக்கவில்லை. விரும்பத்தக்க தோற்றம் என்ற ஒன்றை அது பாதித்து இருக்கலாம். ஏனென்றால் படம் சரியாக போகவில்லை என்பதால்".

" ஆனால், அவரது திறமை அப்படியேதான் இருக்கிறது. காலை பற்றி நீங்கள் யோசிப்பதை இன்னும் விரிவு படுத்துங்கள். அனுஷ்கா அற்புதமாக இருந்தார். அதற்கு பிறகும் அற்புதமாகத்தான் இருக்கிறார்" என நடிகை சுனைனா பதிவிட்டுள்ளார்.