ஹனிமூனில் லப்பர் பந்து நடிகை.. கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் ஸ்டில்ஸ்
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று லப்பர் பந்து. இப்படத்தில் அட்டகத்தி தினேஷின் ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை ஸ்வாசிகா.
இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் 45வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஸ்வாசிகா பிரபல சீரியல் நடிகர் பிரேம் ஜகோப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில், சமீபத்தில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளில் தமிழ் முறைப்படி மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், தற்போது மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கிருந்து எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை நடிகை ஸ்வாசிகாவின் கணவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..