மில்க் மியூட்டி தமன்னாவின் ரீசெண்ட் போட்டோஷூட் வீடியோ...
நடிகை தமன்னா
நடிகை தமன்னாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் முறிவு ஏற்பட்டது. இதன்பின் முழுமையாக தனது கவனத்தை சினிமா பக்கமும் ஜிம் ஒர்க்அவுட் பக்கமும் திருப்பினார். இதன்மூலம் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். தமன்னா உடல் எடையை குறைத்து ஆளே மாறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இவர் ஜிம் ஒர்க்அவுட் செய்து, சரியான டயட் மூலம் உடல் எடையை குறைத்தார். மருந்து எடுத்துக்கொண்டதால்தான் இப்படி மாறியுள்ளார் என இணையத்தில் பலரும் நடிகை தமன்னாவை ட்ரோல் செய்து வந்தநிலையில், தனது உடலில் நடந்த மாற்றம் முழுமையாக இயற்கை.
எந்த குறுக்கு வழியையும் பயன்படுத்தவில்லை என தமன்னா கூறியுள்ளார். "ஒவ்வொரு ஐந்து வருடமும் பெண்ணின் உடல் மாறிக்கொண்டேதான் இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார்.
போட்டோஷூட் வீடியோ
தற்போது போட்டோஷூட் எடுத்த ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தமன்னா.