8 லட்சம் கோடி சொத்து மதிப்பு.. அசைக்க முடியாத முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்.. முழு விவரம் இதோ
Mukesh Dhirubhai Ambani
By Karthick Raja
இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சியை பற்றித் தெரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமம் முகேஷ் அம்பானியின் ஒவ்வொரு திட்டத்திலும், அதனை செயல்படுத்தும் விதத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை யாரும் அசைக்க முடியாத அளவிற்கு மாற்றியுள்ளார்.

தொடர்ந்து நிறுவனங்களை கையகப்படுத்துதல், கடன்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது என எல்லாவற்றையும் திறம்பட செயல்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் வளர்ச்சியை பற்றி தெரிந்துகொள்ள சில புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன, இதோ..
- ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாய் 2001-2002 நிதியாண்டில் ரூ. 45,411 கோடியாக இருந்தது, 2021-2022 நிதியாண்டில் ரூ. 7,92,756 கோடியாக உயர்ந்துள்ளது.
- நிகர லாபம் 2001-2002 நிதியாண்டில் ரூ. 3,280 கோடியாக இருந்த நிலையில், 2021-2022 நிதியாண்டில் ரூ. 67,845 கோடியாக உயர்ந்துள்ளது.
- ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 2001-2002 நிதியாண்டில் ரூ.11,200 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது 2021-2022 நிதியாண்டில் ரூ.2,54,970 கோடியாக உயர்ந்துள்ளது.
- முகேஷ் அம்பானியின் தலைமையின் கீழ், 2006-ல் ரிலையன்ஸ் ரீடெய்ல், 2016-ல் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டது. தொடர்ந்து விரைவிலேயே ஜியோ நிறுவனத்தை கடனே இல்லாத நிறுவனமாக மாற்றினார். 5ஜி அலைக்கற்றையின் பெரும்பகுதி சந்தையையும் கைப்பற்றப்போகிறது.

ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதுபோல அடுத்தடுத்து புதுப்புது முன்னெடுப்புகள் என விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே இருக்கிறது.