நடிகை திரிஷாவுக்கு 35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? பிரிந்த மனைவி சங்கீதா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தும் அப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததும் பெரிய பேசு பொருளாக மாறியது. பல ஆண்டுகள் கழித்து திரிஷாவுடன் ஜோடி போட்டதால் தான் விஜய்யை விட்டு அவரது மனைவி சங்கீதா பிரிந்துவிட்டார் என்ற தகவலும் வெளியானது.
இதனை அடுத்து விஜய் - திரிஷாவை பற்றிய பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. சமீபத்தில் திரிஷா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட போது 1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் கிடைத்துள்ளது. இதற்கான கணக்குகள் இல்லாததால் திரிஷாவிடம் கேட்டதற்கு விஜய் தனக்கு பரிசாக அளித்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை திரிஷா கடந்த ஆண்டு 35 கோடி மதிப்புள்ள ஒரு புதிய வீட்டினை விஜய் வீட்டு பக்கமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நடிகர் அஜித் வீட்டுக்கு பக்கத்தில் 5 கோடி மதிப்பிலான பிளாட் ஒன்றை வாங்கி இருந்தார் நடிகை திரிஷா. அதனை தொடர்ந்து 35 கோடியில் விஜய் வீட்டு பக்கத்தில் வாங்கி இருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
1 கோடி நெக்லஸை போன்று விஜய்யும் இந்த புதிய வீட்டினை கடந்த ஆண்டே வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும் அதனால் தான் விஜய் மனைவி சங்கீதா கடந்த ஆண்டே அவரைவிட்டு பிரிந்துவிட்டார் என்றும் இணையத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது. தற்போது நடிகை திரிஷா வாங்கியிருக்கும் 35 கோடி வீட்டின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 80 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த தகவல் எல்லாம் பொதுவாக இணையத்தில் பத்திரிக்கையாளர்களாலும் சினிமா விமர்சகர்களாலும் கூறப்பட்டு வருவதால், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video