அனிரூத்-ஆ வேண்டவே வேண்டாம்!! அக்காவை தொடர்ந்து ராக்ஸ் ஸ்டாரை ஒதுக்கி வரும் ரஜினிகாந்த் மகள்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களாக மட்டும் இல்லாமல் சினிமாத்துறையில் இயக்குனர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா. பல ஆண்டுகள் கழித்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கியுள்ள ஐஸ்வர்யா, தன் அப்பா ரஜினிகாந்தையும் நடிக்க வைத்து லால் சலாம் படத்தினை இன்று ரிலீஸ் செய்திருக்கிறார்.
படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரை தொடர்ந்து இரண்டாம் செளந்தர்யா கோச்சடையான், விஐபி 2 படத்தினை தொடர்ந்து தற்போது மற்றுமொரு படத்தினை இயக்க திட்டமிட்டுள்ளராம். அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படத்தினை செளந்தர்யா இயக்கவுள்ளாராம். படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிரூத்தின் பெயரை தானு கூறியிருக்கிறாராம். ஆனால் செளந்தர்யா அனிரூத் வேண்டாம் என்று கூறி கண்டீசனும் போட்டிருக்கிறாராம்.
அனிரூத்தின் ஆட்டிட்டியூட் அதிகமாகிவிட்டதால் வேண்டாம் என்ற காரணத்தை கூறி ஜிவி பிரகாஷ் குமாரை புக் செய்யவும் முடிவெடுத்துள்ளாராம். ஆரம்பத்தில் ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான அனிரூத்தை தற்போது ரஜினிகாந்த் மகள்கள் ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் மகள்கள் தான் அனிரூத்தை ஒதுக்கி வருகிறார்கள் என்றால் நடிகர் தனுஷும் ஒதுக்கி வருகிறாரே என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.