த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, விவரம் இதோ

Trisha Net worth
By Kathick May 04, 2025 01:30 PM GMT
Report

நடிகை த்ரிஷா கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார். இன்றும் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, விவரம் இதோ | Actress Trisha Krishnan Net Worth

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகை த்ரிஷா, இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 42 வயதை எட்டியுள்ள நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரிஷாவின் சொத்து மதிப்பு ரூ. 130 கோடி என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.