25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை!! 68 வயது நடிகருக்காக நடிகை திரிஷா செய்யும் செயல்..
தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் பல சறுக்கல்களை சந்தித்து டாப் இடத்தினை பிடித்தார். மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தினை பிடித்தார். இடையில் லீக்ஸ் வீடியோ, காதல் தோல்வி, நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம் என பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார்.
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இரு மடங்காக உயர்த்தினார். இதனை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் Thug Life போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டோலிவுட் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் Vishwambhara என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
தற்போது இப்படத்திற்காக தீவிர குதிரை பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம் திரிஷா. ஒரு வீர பெண்மணியாக அக்ஷன் ரோலில் நடிக்கும் திரிஷா, இப்படத்திற்காக குதிரையேற்றம், களரி சண்டை போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது திரிஷா எடுத்த குதிரையேற்ற பயிற்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video
