கில்லி-யில் அந்த காட்சியை நானும் விஜய்யும் தூக்க கலக்கத்துல!! ஓப்பனாக பேசிய நடிகை திரிஷா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ல் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கில்லி படம் சில நாட்களுக்கு முன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை சுமார் 15 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது கில்லி படம். இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிக்கரமாக ஓடியதை கொண்டாடும் வகையில் கில்லி படத்தின் விநியோகம் செய்த சக் ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் விஜய்யை சந்தித்து மாலை அணிவித்து கொண்டாடினர்.
இந்நிலையில் கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சியில் நடித்தது பற்றி ராங்கி படத்தின் பிரமோஷன் சமயத்தில் நடிகை திரிஷா சொன்ன விசயம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த காட்சி எடுக்கும் போது இரவு 2, 3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் நடித்தோம்.
இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம். பார்க்க சில காட்சிகள் எல்லாம் அழகா இருக்கும், நமக்கு தான் தெரியும், பின்னாடி என்ன நடக்கும்னு என்று நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.