அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடிக்க த்ரிஷா வாங்கிய சம்பளம்! வெளிவந்த தகவல்
Ajith Kumar
Trisha
VidaaMuyarchi
By Karthick Raja
நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி உலகளவில் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் பல வருடங்களுக்கு பின் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இதனால் படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.