சேலை கட்டினாலும் அப்படித்தான் பாக்குறாங்க.. ஹட் புகைப்படத்தால் புலம்பும் நடிகை வாணி போஜன்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இதன்பின் தெய்வமகள் என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
குடும்ப குத்து விளக்கு நடிகை என்ற பெயரெடுத்த வாணி போஜன் வெள்ளித்திரை படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விக்ரம் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான மகான் படத்தில் அவரின் கள்ளக்காதலியாக நடித்திருந்தார்.
ஆனால் படத்தில் ஒரு காட்சி கூட வாணி போஜன் நடித்ததை வெளியிடவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார். தற்போது க்ளாமர் பக்கம் தாவியுள்ள வாணி போஜன் கவர்ச்சியை பற்றி பேசியுள்ளார். சேலைக்கட்டினாலும் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான ஆடையணிவது வைரலாகியும் இருக்கிறது.
அப்படி நான் சேலையை போர்த்திக்கொண்டு வந்தாலும் கவர்ச்சி, ஹாட்ன்னு சொல்லி செய்திகளை போடுகிறார்கள். எதுக்கு ஏன் இப்படி போடுறாங்க என்று தெரியவில்லை என்று புலம்பியுள்ளார் வாணி போஜன்.
மேலும், ஆரம்பத்தில் இதனால் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு நடிகருடன் போனால் தவறாக போடுறாங்க. இதை என் அம்மா கூட பார்த்து கேட்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.