பப், பார்ட்டி என வலம் வரும் வனிதா விஜயகுமார்!! கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்
வனிதா விஜயகுமார்
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.
அதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், அந்நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ வரும் வாய்ப்புகள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்கிறார். இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களையும் தொடங்கி கவனித்து வருகிறார்.
கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்
இவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், பப்பில் ரசிகர்களுடன் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டுள்ளார்.
அதை கண்டு ரசிகர்கள் இந்த வயதில் இவருக்கு இது எல்லாம் தேவையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தின் ப்ரமோஷனக்காகத்தான் இவ்வாறு செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.