2025 புத்தாண்டு : பணமழையில் நனையப்போகும் ரிஷபம் ராசிக்காரர்கள்.....
2025 புத்தாண்டு
2025 புத்தாண்டு ரிஷபம் ராசிகர்களுக்கு பல யோகங்கள் அடிக்கப்போகிறதாம். 2024 உங்களை போட்டுப் புரட்டி எடுத்திருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் இழுப்பறி, காசில்லாத நிலை, கணவன் மனைவிக்கிடையே சண்டை என்று இருந்த ரிஷபம் ராசிகர்களுக்கு 2025 ஏகப்பட்ட யோகங்கள் தரும்.
குறிப்பாக வரும் சனிப்பெயர்ச்சி அருமையாக இருக்கும், அதிலும் மார்ச் மாதம் 29ல் இருந்து சனி பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் வருகிறாராம்.
ரிஷபம் ராசிக்காரர்கள்
30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் நல்ல இடத்திற்கு வருவதால் பண வரவு, வாங்கி வைத்த வீட்டு மனைகள் 4 முதல் 5 மடங்கு உயர்வது போன்ற ராஜயோகம் ஏற்படும்.
குருப்பெயர்ச்சி இருக்கும் மே 14முதல் குரு பகவான் ராசியை விட்டு விலகுவதால் கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மே 14 முதல் குரு பகவான் சாதகமாக இருப்பதால் நல்ல லாபம் கிடைக்கும். மே 18 முதல் ராகு கேதுவும் சாதகமாக மாறுவதால் எல்லாம் வெற்றியாகும். 2025 யோகங்கள் அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக மாறும்.
பொது காரியங்கள், கோயில் காரியங்கள் நல்லதாகவும், ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு தொடர்ந்து 4 மாதங்களுக்கு 11வது இடத்திலேயே உட்கார்ந்திருப்பதால் பெரிய பதவிகள், பொறுப்புகள், உயர்வுகள் வரும்.
2025 உங்களுக்கு எல்லாவிதமான முன்னேற்றங்கள் தரக்கூடியதாகவும் நம்பர் 1 இடத்தில் இருக்கவும் பெருமாளை தரிசிப்பது நல்லது, குறிப்பாக நரசிம்ம பெருமாளை சேவிப்பது நல்ல பலனை தாருமாம்.