அரசியலில் குதிக்கும் வரலக்ஷ்மி!! இன்ஸ்பிரேஷன் இவங்க தான்.. சபாஷ் சரியான போட்டி
வரலக்ஷ்மி சரத்குமார்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது.
தற்போது, இவர் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது சில தினங்களுக்கு முன் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், வரலக்ஷ்மி மத கஜ ராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வரலக்ஷ்மி பேட்டி
அதில், " சோசியல் மீடியாவில் தேவையில்லாமல், வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை".
மேலும், அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக ஒரு நாள் அரசியல் வருவேன் ஆனால் தற்போது சினிமாவில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
சினிமாவிலேயே இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் படங்களில் நடிக்க வேண்டும், படத்தை இயக்க வேண்டும் என்ன பல வேலை இருக்கிறது.
அதை எல்லாம் முடித்துவிட்டு அரசியல் வருவேன். அரசியலில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேம், உண்மையில் அவர் ஒரு அயன் லேடி" என்று கூறியுள்ளார்.