நியூ லுக்கில் கிளாம் போஸ்!! நடிகை வரலட்சுமி சரத்குமாரின் புகைப்படங்கள்..
வரலட்சுமி சரத்குமார்
சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு தனது காதலர் நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்த வரலட்சுமி, சமீபத்தில் நடந்து முடிந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார்.
வரலட்சுமியின் கணவர், அவருக்கு சமீபத்தில் விலையுயர்ந்த பிராண்ட்-நியூ போர்ஷே 718 பாக்ஸ்டர் என்ற காரை பரிசாக அளித்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வரலட்சுமி, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.