சினிமால பணம் சம்பாதிக்கலாம்..அவமானங்கள் தான் அதிகம்!! நடிகை விசித்ரா ஓபன் டாக்...
தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து அனைவரது அன்பையும் பெற்றார் விசித்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம்.

சினிமால பணம் சம்பாதிக்கலாம்
அதில் புகழும், பணமும் கிடைக்கும், ஆனால் அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்றால் கிடையாது. அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்கள், கேலி கிண்டல்கள், அலட்சியங்கள் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டியிருக்கும்.
ஆனால் ஒரேவொரு, ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் வந்திவிட்டால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள், அதுதான் சினிமா. சினிமாத்துறையை பொறுத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது.

அதனால் தான் சினிமாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது.
அதேபோல், எதிரியாக்கி ஒதுக்கவும் கூடாது. ஏனென்றால், காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கதிகமாக நெருங்கிப்பழக மாட்டேன்.
அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால்தான், இன்று என் வாழ்க்கையை நான் எந்த குழப்பமும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.