ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை குறி வைக்கிறாரா முதலமைச்சர் விஜய்? அதுவும் இத்தனை கோடியா...
முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய், பதவியேற்று கிட்டத்தட்ட 2 மாதங்களாகிய நிலையில், தினமும் நீலாங்கரை வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்கிறார். இதனால் விஜய் அலுவலகம் பக்கத்திலேயே வீடு மாறுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து மாறப்போவதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ரூ. 350 கோடிக்கு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடான வேதா இல்லத்தை வாங்குவது குறித்து அவரது அண்ணன் மகள் தீபாவுடன் விஜய் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து அதற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்
முதலமைச்சர் விஜய் அவர்கள் வேதா இல்லத்தை வாங்கும் தகவலில் உண்மையில்லை. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் ஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை, வாரிசும் இல்லை. எனவே இவரது சொத்துகள் அனைத்தும் அண்ணன் மகளான ஜெ. தீபாவிற்கு போய் சேரும் வகையில் சட்ட விதிகள் அமைந்துள்ளன. அதன்படி சென்னையில் ஒரு காலத்தில் அரசியல் அதிகார மையமாக திகழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் ஜெ. தீபா வசம் சென்றது.
இவரது பராமரிப்பின் கீழ் தான் அந்த வீடு இருக்கிறது. ஜெ. தீபா ஏற்கனவே தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருவதால் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கு குடியேறும் திட்டங்கள் ஏதும் இல்லை, அதை நினைவிடமாக மாற்றும் திட்டமும் இல்லை என்றும் தற்போது விற்பனைக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu CM directs comprehensive road safety plan and expressway plans
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) July 14, 2026
Chief Minister C. Joseph Vijay has directed officials to prepare a dedicated action plan to reduce road accidents across Tamil Nadu.
During a review meeting of the Highways Department, He instructed…