அஜித்னா வேண்டவே வேண்டாம், விஜய்-னா ஓகே !! AK-வை ஒதுக்கி வரும் பிரபல விவாகரத்து நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், துணிவு படத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா நடித்து வருகிறார்.
அவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப்போடும் நிலையில், டாப் இடத்தில் இருக்கும் ஒருசில நடிகைகள் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா.
சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளில் இதுவரை சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் ஜோடிப்போட்டிருந்தார். ஆனால் அஜித்துடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.
நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் சர்கார், பைரவா படங்களில் நடித்தார். ஆனால் அஜித்துடன் நடிக்கவில்லை. நடிகை அமலா பால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.
You May Like This Video