குடும்பம் நடத்த சொன்னா ஜாலியா நடத்துவாறு!! அஜித்தை புகழ்ந்து கமலை வெச்சு செய்த பிரபல நடிகை..
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை விந்தியா. சங்கமம் படத்தின் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த விந்தியா தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக-வின் கட்சி பேச்சாளராக இருந்து வரும் விந்தியா சமீபத்தில் மேடையில் கமல், அஜித்தை பற்றி பேசிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடிகை விந்தியா, நீ தைரியமான வீரமானவராக இருந்தால் அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போது மேடையில் அம்மாவை வைத்துக்கொண்டு பேசியிருக்கனும்.

அது எப்படி இருக்கும் என்று கமல் ஹாசன் கேட்கலாம். ஏன் தல அஜித் குமார் பேசல. கருணாநிதி இருக்கும் போதே கட்சிக்காரங்களை கேட்கல புகார் சொல்லல, அதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டல. அவங்க தைரியசாளிங்க, வீரங்க.
கமல் ஹாசன் எல்லாம் வீரன்னு சொல்லிக்கலாமா என்றும் குடும்பம் நடத்த சொன்னா ஜாலியா நடத்துவாரு என்று கலாய்த்து மேடையில் பேசியிருக்கிறார்.
கருணாநிதி முன்னாடியே அவங்க கட்சிகாரங்க தப்பு பண்ணுறாங்கான்னு சொன்னவர் தல அஜித்.
— Suresh AK ™ (@Suresh_Ak13) March 10, 2023
~ விந்தியா அதிமுக பேச்சாளர்#Ajithkumar? #Thunivu pic.twitter.com/73eaj4Q1MQ