பிக்பாஸில் வாரத்துக்கு 8 லட்சம் சம்பளம்!! நடுரோட்டில் காதலரால் தாக்கப்பட்ட 33 வயது நடிகை..
டினா டட்டா
கல்கத்தாவை சேர்ந்த நடிகை டினா டட்டா, தன்னுடைய 5 வயதில் பெங்காலி சீரியல் மற்றும் படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். கடந்த 2003ல் வெளியான சோக்கர் பாலி என்ற இந்தி படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடித்து பிரபலமானார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த டினா, 5 ஆண்டுகளாக காதலித்து வந்த அவரது காதலர் பொதுவெளியில் வைத்து அவரை அடுத்து அவமானப்படுத்தியது அப்போது பெரியளவில் பேசப்பட்டது.
டினா டட்டாவின் முன்னாள் தோழியும் நடிகையுமான ஸ்ரீஜிதா தே அவர்மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து, டினா வீட்டை உடைக்க முயற்சித்த சம்பவமும் சர்ச்சையானது.
8-9 லட்சம் சம்பளம்
இந்நிலையில் 33 வயதான டினா டட்டா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ஒரு வாரத்திற்கு 8-9 லட்சம் வழங்கப்பட்டு அதிக ஊதியம் பெறும் போட்டியாளர் என்ற பெயரை எடுத்தார்.
தற்போது சீரியல், சினிமா என இரண்டிலும் விலகி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ65 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.