7 வயது மகளை மறச்சிட்டாங்க.. விவாகரத்தாகாமல் நடிகருடன் 5 வருடம் உறவில் இருந்த சீரியல் நடிகை..
சின்னத்திரை வட்டாரத்தில் பெரியளவில் தற்போது பேசப்பட்டு வரும் செய்தி, அக்கடதேசத்தில் இருந்து தமிழில் நடித்து வரும் சீரியல் நடிகை கர்ப்பமானது தான். அக்கடதேசத்து நடிகையாக ஒரு சீரியலில் நடித்து வந்த அந்த நடிகை சக நடிகருடன் காதல் வயப்பட்டு அவரை ரகசியமாக திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
நடிகையுடன் தொடர்பு
ஒரு மாதம் கழித்து அந்த நடிகை அவரால் கர்ப்பமும் ஆகியுள்ளார். 5 வருடங்களாக காதலில் இருக்கும் போது தனக்கு திருமணமாகியதையும் 7 வயது மகள் இருப்பதையும் அந்த காதல் நடிகருடன் சொல்லாமல் மறைத்திருக்கிறார். இதற்கிடையில் திருமணத்திற்கு பின் நடிகர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் நெருக்கமாக இருப்பதாகவும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி வீடியோவை வெளியிட்டார். தன்னை அடித்து கொடுமைப்படுத்தும் கணவர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருந்தார்.
விவாகரத்து - மகள்
அதேசமயம் அந்த நடிகருடன், தன்னை மனைவி ஏமாற்றிவிட்டார் என்றும் தன் குழந்தையை கலைக்க வேறொரு நடிகருடன் சேர்ந்து திட்டம்போட்டு வருகிறார் என்று கூறி புகாரளித்தார். மேலும் தனக்கு விவாகரத்தாகாமலே, விவாகரத்து செய்துவிட்டேன் என்று பொய் கூறியும், உறவினர் மகள் தான் அது என்றும் 7 வயது மகளையும் மறைத்துவிட்டார் என அந்த நடிகர் புலம்பி இருக்கிறார்.என்னை காதலிக்கும் போது கூட முன்னாள் கணவருடன் தொடர்பிலும் இருந்திருக்கிறாள் என்றும் தெரிவித்திருக்கிறார் அந்த ஏமாந்துபோன நடிகர்.