சட்டை கசங்காம ரூ. 500 கொடி வசூலிக்க ரஜினி சாரால் தான் முடியும்!! புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்..

Rajinikanth Anirudh Ravichander Allu Arjun Nelson Dilipkumar Jailer 2
By Jai Oct 23, 2026 02:30 AM GMT
Report

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜெயிலர் 2. பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான ஜெயிலர் 2 படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 549 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.

சட்டை கசங்காம ரூ. 500 கொடி வசூலிக்க ரஜினி சாரால் தான் முடியும்!! புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்.. | Rajini Can Do Wrinkle Appearing Shirt Alluarjun

இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களின் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஜெயிலர் 2 படத்தை பார்த்து தன்னுடய கருத்தை தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெயிலர் 2 ரஜினிகாந்த் சாரின் ஸ்டார் பவர், ஸ்வாக் மற்றும் ஆராவின் உண்மையான காட்சி என்று ஃபயர் விட்டுள்ளார்.

சட்டை கசங்காம ரூ. 500 கொடி வசூலிக்க ரஜினி சாரால் தான் முடியும்!! புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்.. | Rajini Can Do Wrinkle Appearing Shirt Alluarjun

மேலும், பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் விறுவிறுப்பான கமர்ஷியல் என்டர்டெய்னர். அனிருத் கலக்கிவிட்டார், அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் இப்படத்திற்காக தங்கள் இதயத்தையே கொட்டியுள்ளனர். ஷோமேன் நெல்சன் ஒரு மாஸ் ஹிட் கொடுத்துள்ளார்.

சட்டைக்கூட கசங்காமல் ரூ. 500 கோடி வசூலிப்பதெல்லாம் ரஜினி சாரால் மட்டுமே முடியும், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அல்லு அர்ஜுன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.