ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம்.. வினோத பழக்கம் கொண்ட நடிகை இவரா

Sneha Tamil Cinema Tamil Actress
By Bhavya Feb 13, 2025 01:30 PM GMT
Report

சினேகா

புன்னகை அரசியாக மக்களின் மனதில் இன்று வரை கொள்ளை கொண்டு வலம் வருபவர் நடிகை சினேகா. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட அவரை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். திருமணம், குழந்தைகள் வளர்ப்பு என சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 

ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம்.. வினோத பழக்கம் கொண்ட நடிகை இவரா | Actress Who Dont Repeat Dress

ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக சினேகா விஜய்யுடன் GOAT படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

வினோத பழக்கம்

மேலும், சொந்தமாக துணி கடையும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில், நடிகை சினேகா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, சினேகா ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம். அது ஏன்னென்றால், ஒரு முறை சினேகா ஒரே துணியை அணிந்து வந்ததை கண்டு பத்திரிக்கையில் அவரிடம் வேறு துணி இல்லை என்று எழுதி உள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு பின் அவர் ஒரு முறை அணிந்த துணியை ரிப்பீட் செய்ய மாட்டாராம்.  

ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம்.. வினோத பழக்கம் கொண்ட நடிகை இவரா | Actress Who Dont Repeat Dress