நடிகை நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் டும்டும்டும்.. காதலருடன் அழகிய ஸ்டில்ஸ்!
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் கடந்த 2016 - ம் ஆண்டு ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
அந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் மற்றும் பிரவு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ள இவர் கடைசியாக பருவு என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
டும்டும்டும்
இந்நிலையில், தற்போது தனது காதலர் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்ய இருக்கும் ரஜித் இப்ரான் பிரபல தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர்.