அந்த விபத்தாகி 3 ஆண்டுகளுக்கு பின் அதை பண்றதையே விட்டுட்டேன்!! நடிகை யாஷிகாவின் மறுப்பக்கம்..
மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார்.

அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில் விஜே அர்ச்சனாவின் யூடியூப் சேனலில் கலந்து கொண்டு எமோஷ்னலாக பேசியிருக்கிறார். 17 வயதில் முரட்டு குத்து படம் நடித்ததாலும், கிளாமர் ரோலில் நடிக்கும் போது நிஜ வாழ்க்கையில் அப்படித்தான் இருப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். நெகட்டிவ்-ஆக பேசுறவர்கள் அப்படி தான் பார்பார்கள். எனக்கு ஹேட்டர்ஸ் இருந்தால் தூரத்தில் இருந்து என்னை பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று சொல்வென்.
நான் Veg உணவு சாப்பிட்டு வருகிறேன். எனக்கு ஒரு அலர்ஜி இருக்கு, Non-Veg சாப்பிட்டால் உதடு வீங்கிவிடும், கண்ணுக்கு கீழ் பெரிதாகிவிடும், ஐ படத்தில் வர விக்ரம் போல் மாறிவிடுவேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். மேலும், கார் விபத்திற்கு பின் நான் இரவு தூங்கி பல ஆண்டுகள் ஆகிறது, தூக்கமே வராது, காலை 5 மணிக்கு மேல் தான் தூங்குவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் புல்லட் ஓட்டுவதையும் நிறுத்திவிட்டேன். புல்லட் ஓட்டினால் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.