40 வயதாகியும் திருமணத்தை ஒதுக்கி வரும் 6 நடிகைகள்!! ஜோதிகாவின் குழந்தைக்கு தாயாக மாறிய நடிகை..
சினிமாவை பொருத்தவரையில் திருமணம் செய்தால் மார்க்கெட்டை இழக்க நேரும் என்பதற்காக சில நடிகைகள் கல்யாணம் செய்யாமல் இருப்பார்கள். ஆனால் நடிகைகளுக்கு ஏற்ற வரன் அமையாததால் 50 வயதாகியும் திருமணமே செய்யாமல் சிங்கிளாக இருக்கும் சில நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி திருமணம் செய்யாமல் வாழ்க்கையில் செட்டிலாகிய நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.
மும்தாஜ்
தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை மும்தாஜ். டி ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய மும்தாஜ், பல படங்களில் ஐட்டம் ஆட்டம் போட்டு பிரபலமானார். இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின்பும் வாழ்க்கையில் செட்டினாலாலும் சினிமாவில் நல்ல வரவேற்பு பெறாமல் இருக்கிறார். இதனால் 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
சித்தாரா
80களில் கொடிக்கட்டி பறந்த தென்னிந்திய நடிகை தான் சித்தாரா. புதுபுது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்ற சித்தாரா தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வெறுத்து ஒதுக்கி வருகிறார். இதற்கு காரணம் இளம் வயதில் காதல் தோல்வி ஏற்படுத்தியது தான்.
கெளசல்யா
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான நடிகை கெளசல்யா தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். ஆர்மீகத்தில் இறங்கியதால் திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் 43 வயதாகியும் சிங்கிளாக இருந்து வருகிறார்.
தபு
பாலிவுட் நடிகையாக தற்போது வரை முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகை தபு. அஜய் தேவ்கனுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் மனவேதனையில் 51 வயதாகியும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார்.
நக்மா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா. தற்போது 53 வயதை எட்டியும் திருமணம் செய்யாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பல பிரபலங்களுடன் ஆரம்ப சினிமா வாழ்க்கையில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நக்மா தன் சகோதரி ஜோதிகாவின் குடும்பத்துடன் நேரத்தை செலவிக்கு குழந்தைகளை பராமரித்தும் வருகிறாராம்.